பள்ளிக்கு வரும் குழந்தைகளை நேசமுடன் வரவேற்போம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

சென்னை: நவம்பர் 1ம் தேதி மீண்டும் பள்ளிக்கு பயில வரும் குழந்தைகளை நேசமுடன் வரவேற்போம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து பேசிய அவர், பள்ளிகளை நோக்கி துள்ளி வரும் பிள்ளைகள் அனைவரையும் வருக, வருக என்று வரவேற்கிறேன். விருந்தினர்களை வாசலுக்கு வந்து வரவேற்பதை போல வரவேற்பு கொடுங்கள் என கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்தார். நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்; இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டிருக்கிறார்.

என்னுடைய அன்பார்ந்த வேண்டுகோளை ஏற்று, மாணவச் செல்வங்கள் பள்ளிக்கு வரும் நாளை இனிய நாளாக மாற்றுங்கள். பள்ளிக்கு வரும் பிள்ளைகளை நேசமுடன் கண்போல போற்றுங்கள்.

உருவாக்குவோம். நாம் அனைவரும் சேர்ந்து நம் குழந்தைகளைக் கொண்டாடுவோம்.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ்   இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!!