விவசாயக் கடன் மற்றும் நகைக் கடன்கள் தள்ளுபடி எப்போது? முதல்வர் ஸ்டாலின் சொன்ன தகவல்!!

ஸ்டாலின் விளக்கம்:

விவசாய கடன் மற்றும் நகை கடன் குறித்த விவாதத்தின் போது முதல்வர் மு.க. ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் கூறுகையில் சட்டப்பேரவை கூட்டம்:

சட்டப்பேரவை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கூறுகையில், அதிமுக ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் அறிவித்து இன்னும் வழங்காமல் உள்ளது. திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இருந்து எக்காரணத்தாலும் பின்வாங்க மாட்டோம்.

நிதி பற்றாக்குறையை சரி செய்து தேர்தல் அறிக்கையில் சொன்னதை நிச்சயமாக நிறைவேற்றுவோம். வாக்குறுதிகளை அதிமுக நிறைவேற்றவில்லை எனக்கூறி நாங்கள் தப்பித்துக் கொள்ள பார்க்கவில்லை.

அதிமுக ஆட்சியில் பயிர்க்கடன், நகைக்கடன் தள்ளுபடியில் பல குறைகள் உள்ளன. அதை எல்லாம் சரி செய்து பிறகு கடன் தள்ளுபடி குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். முறைகேடுகள் ஆதாரத்துடன் மானிய கோரிக்கை விவாதத்தில் எடுத்துரைக்கப்படும் என தெரிவித்தார்.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்த கொள்ள தமிழன்ஜாப்ஸ்  இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!