TNPSC குரூப்-2, குரூப்-4 தேர்வுகள் எப்போது? முக்கிய தகவல்கள் வெளியானது,,,

TNPSC நிர்வாகம் அறிவிப்பு:

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பல தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன என்பதும், ஒரு சில தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த ஆண்டு அனைத்து தேர்வுகளிலும் தமிழ் மொழி சேர்க்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இது குறித்து நாளை அதிகாரிகள் ஆலோசனை செய்ய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக TNPSC குரூப் தேர்வுகள் நடத்தப்படாததால் வேலைவாய்ப்பு இன்றி இருக்கும் இளைஞர்களை கணக்கில் கொண்டு இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் TNPSC குரூப் 2 மற்றும் குரூப் 4 உள்பட 38 வகையான தேர்வுகளை நடத்த TNPSC நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ்  இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!