முழு ஊரடங்கின் போது எவை மதியம் 12 மணி வரை மட்டுமே இயங்க எதற்கு அனுமதி? எதற்கு அனுமதி இல்லை?

தமிழகத்தில்  கொரோனா பரவல் காரணமாக தற்போது முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனை ஒட்டி எவையெல்லாம்  மதியம் 12 மணி வரை இயங்கும்? இயங்காது? என்பதை பின் வருமாறு தெரிந்து கொள்ளுங்கள்.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக இன்று (திங்கட்கிழமை) முதல் 24-ந் தேதி வரையிலான 15 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு சமீபத்தில் அறிவித்தது.

முழுமையாக தடை விதிக்கப்பட்ட கடைகள்:

  1. பெரிய கடைகள்
  2. வணிக வளாகங்கள்
  3. டாஸ்மாக்
  4. மாநில அரசு அலுவலகங்கள் எதுவும் இயங்காது.
  5. மாவட்டங்களுக்குள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான அரசு-தனியார் பஸ் போக்குவரத்து மற்றும் வாடகை டாக்சி, ஆட்டோக்கள் ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்படுகிறது. எனவே பஸ் ஓடாது.

பகல் 12 மணி வரை இயங்கும் கடைகள்:

  1. உணவுகளை டெலிவரி செய்யும் ஆன்-லைன் வணிக நிறுவனம்
  2. மளிகை
  3. பலசரக்கு
  4. காய்கறி
  5. இறைச்சி
  6. மீன் கடைகள்
  7. டீக்கடை
  8. ஓட்டல்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், பகல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படுகிறது.
  9. தலைமைச் செயலகம்
  10. மருத்துவத்துறை
  11. வருவாய்த்துறை
  12. பேரிடர் மேலாண்மை
  13. காவல் துறை
  14. ஊர்க்காவல் படை
  15. தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை
  16. சிறைத்துறை
  17. மாவட்ட நிர்வாகம்
  18. மாவட்ட தொழில் மையங்கள்
  19. மின்சாரம்
  20. உள்ளாட்சி துறைகள்
  21. வனத்துறை அலுவலகங்கள்
  22. கருவூலங்கள்
  23. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அலுவலகங்கள்
  24. அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும்.
  25. காய்கறி மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் பகல் 12 மணி வரை அனுமதிக்கப்படும்
  26. ரேஷன் கடைகள் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை செயல்படும்.
  27. பெட்ரோல் – டீசல் பங்க்குகள் இயங்கும்

 

மேற்கண்ட விதிமுறைகளை பின்பற்றாதோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது… அதனால்  மக்கள் அனைவரும் கண்டிப்பாக பின் பற்ற வேண்டும்.