நவம்பர் 1 பள்ளிகள் திறப்பு ஏன்? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!!

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவிப்பு:

மாவட்டம் குத்தாலம் தாலுகா கோமல் ஊராட்சியில் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் 16 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய கிளை நூலகக் கட்டிடம் திறப்பு விழா இன்று மாவட்ட ஆட்சியர் ரா.லலிதா தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், சட்டமன்ற கொறடா கோவி.செழியன், அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மெய்யநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.

நூலகக் கட்டிடத்தை திறந்து வைத்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால் பள்ளி செல்லும் குழந்தைகள் மனதளவில் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அவர்கள் மனரீதியாக மீண்டும் நடைமுறை வாழ்க்கைக்கு வரவேண்டும் என்பதற்காக நவம்பர் 1-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!!