தமிழகத்தில் நீட் தேர்வு நடைபெறுமா? பெறாதா? சட்டத்துறை அமைச்சர் ஆலோசனை!

தமிழகத்தில் நீட் தேர்வு நடைபெறுமா? பெறாதா? சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்துள்ளார்.

அதாவது என்னவென்றால்,

தேசிய அளவில் மருத்துவ படிப்புகளில் சேர எழுதும் நுழைவுத் தேர்வு தான் நீட்.  இந்த நீட் தேர்வு நடத்தப்படடுவதால் மாணவர்கள்  பலரும் பயம் கொள்கின்றனர். இந்த தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் மன உளைச்சலால் தற்கொலை செய்து கொள்ளும் அவலம் நடந்து கொண்டிருக்கிறது. இந்த காரணத்தினால் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று அ ரசியல் பிரமுகர்கள் வலியுறுத்தி வந்தனர்.

மேலும், இதற்க்கு முன்னர் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது நீட் தேர்வினை ரத்து செய்ய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். அதனால், இது குறித்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். புதுக்கோட்டையில் உள்ள அரசு மருத்துவமனையினை ஆய்வு செய்த அவர் போது உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள முல்லை பெரியாறு உள்ளிட்ட வழக்குகளில் முறையாக தமிழக அரசு சார்பில் வாதாடப்படும்.

நீட் தேர்வு நடத்துவது குறித்து தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் நல்ல முடிவினை விரைவில் அறிவிக்க  வேண்டும்.

மேலும் இது குறித்து, பேரறிவாளன் உட்பட 7 பேரின் விடுதலை குறித்த மனு நிலுவையில் உள்ளது. அதற்கு விரைவில் முதல்வர் தீர்வு காணுவார். இவ்வாறு இதில் கூறப்படுள்ளது.