தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் மூடப்படுமா? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்

உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வரும் ஒமைக்ரான் வைரஸ், இந்தியாவில் பரவுவதை கட்டுப்படுத்தும் விதமாக, விமான நிலையங்களில் கண்காணிப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் மொத்தம் இதுவரை 21 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் தொடர்பில் இருந்தவர்களை பரிசோதனை செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனடிப்படையில் பாதிப்பு இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒமைக்ரான் குறித்து பதட்டப்பட வேண்டாம் என்று கூறியுள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள் மாஸ்க் அணிதல், தடுப்பூசி செலுத்திக் கொள்ளுதல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு விதிகளை தீவிரமாக பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். தமிழகத்தில் மாநில எல்லைகளில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

“ஒமைக்ரான் தொடர்பாக பொது சுகாதாரத்துறையிலிருந்து பள்ளிக் கல்வித் துறைக்கு அதிகாரப்பூர்வமாக தகவல்கள் வரவில்லை. பொதுவாக பொதுமுடக்கத் தளர்வை அமல்படுத்தும்போது மருத்துவ ஆலோசனைக் குழுவைத் தமிழக முதல்வர் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பது வழக்கம். அடுத்து வருகிற பொதுமுடக்கம் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் ஒமைக்ரான் குறித்து விவாதிக்கப்படும். இதில், எடுக்கப்படும் முடிவின் அடிப்படையில் செயல்படுத்தப்படும்” என்றார்.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!!