நவம்பர் 1 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுமா? தள்ளிப்போகுமா?

அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவிப்பு:

நவம்பர் 1 ஆம் தேதி, 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், குறிப்பட்ட தேதியில் பள்ளிகள் திறக்கப்படுமா அல்லது தள்ளிப்போகுமா என்ற எதிர்பார்ப்பு நிலவும் சூழலில், இம்மாதம் 13 ஆம் தேதி அதிகாரிகளுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்துகிறார்.

அக்டோபர் 12ஆம் தேதி நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில், பள்ளி கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா, ஆணையர் நந்தகுமார், அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், அரசு தேர்வுகள் துறை, பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

நவம்பர் 1ஆம் தேதி 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிகளை திறப்பதா வேண்டாமா என்பது குறித்தும், அவ்வாறு திறப்பதாக இருந்தால் அதற்கான முன்னேற்பாடுகள் தொடர்பாகவும் இந்த கூட்டதில் ஆலோசிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ்   இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!