12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுமா? பெறாதா? புதிய கல்வி துறை அமைச்சர் ஆலோசனை!

தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் தீவிரம் அடைந்து உள்ளது. அதன் காரணமாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  ஏற்கெனவே கொரோனாவின் காரணமாகத்தான் 10 ஆம் வகுப்பு பொது தேர்வு ரத்து  செய்யப்பட்டது.

கடந்த கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்ட போது காலாண்டு, அரையாண்டு பொதுத் தேர்வுகள் கணக்கில் கொள்ளப்பட்டன. அனால் இந்த ஆண்டில் காலாண்டு, அரையாண்டு தேர்வே நடைபெற வில்லை இருப்பினும் அப்படி மதிப்பெண் வழங்குவது என்று சிக்கல் ஏற்ப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு மிக வேகமாக அதிகரித்து வரும் நிலையில் தேர்வை நடத்துவதில் சிக்கல் இருக்கிறது.

தேர்வு நடைபெறுமா, நடைபெறாதா, எப்போது நடைபெறும் என தெரியாமல் மாணவர்கள் தொடர்ந்து மன குழப்பத்தில் உள்ளனர்.

எனவே புதிய கல்வி துறை அமைச்சராக பொறுப்பேற்ற  அன்பில் மகேஷ் பொய்யாமொழி அதிகாரிகளுடன் வரும் திங்கள்கிழமை ஆலோசனை நடத்துகிறார்.