தமிழகத்தில் முழு ஊரடங்கு மேலும் நீடிக்குமா? முதல்வர் இன்று மாலை விளக்கம்!!

தமிழகத்தில் முழு ஊரடங்கு மேலும் நீடிக்குமா: 

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள முழு ஊரடங்கு வரும் திங்கள் கிழமை மே 24 தேதி முடிவடைகிறது இந்த  நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்வர் இன்று மாலை ஆலோசனை அறிவிப்பு.

ஊரடங்கு நீட்டிப்பு:

தமிழகத்தில் கொரோனா 2 ஆம் அலை காரணமாக  மே 10 முதல் 24 ஆம் தேதி வரை 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு காலத்திலும் மாநிலம் முழுவதும் நோய் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 36 ஆயிரத்துக்கும் மேலாக பதிவு செய்யப்பட்டு வருகிறது. தவிர பலி எண்ணிக்கையும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இந்த ஒரு நாள் பாதிப்பில் மற்ற மாநிலங்களை விட தமிழகம் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழகத்தில் வரும் 29 ஆம் தேதி முதல் 31 வரை கொரோனா உச்சம் அடையும் என மருத்துவ வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

இந்த நிலையில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர தற்போது நடைமுறையில் இருக்கும் முழு ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்து, முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் மருத்துவ நிபுணர் குழுவினருடன் இன்று (மே 22) ஆலோசனை நடத்த உள்ளார். இதை தொடர்ந்து பின் காலை 11:30 மணியளவில் எம்எல்ஏக்கள் குழுவினருடன் முதல்வர் ஆலோசனை நடத்த உள்ளார். தலைமை செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில், ஊரடங்கை நீட்டிப்பது குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு இன்று மாலை அறிவிப்புகள் வெளியாகும் என தகவல்கள் கிடைத்துள்ளது.