TNPSC Group 4 Syllabus வெளியிடுமா? தேர்வர்கள் எதிர்பார்ப்பு!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு 2021:

குரூப் IV சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்கான அட்டவணை மற்றும் தேர்வு நடைபெறும் தேதிகள் குறித்த அறிவிப்பு இம்மாதம் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் பெறப்பட்டுள்ளது. இதனால் தேர்வர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருப்பதாக தெரிவித்து உள்ளனர்.

அரசு வேலை கனவுகளோடு படித்துக் கொண்டிருக்கும் தேர்வர்கள் பாடத்திட்டம் குறித்த தேர்வாணைய அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

TNPSC தேர்வு:

TNPSC தேர்வு செப்டம்பர் மாதம் அறிவிக்கப்பட வேண்டிய குரூப் 4, VAO தேர்வுகள் குறித்த அறிவிப்பு இம்மாத இறுதிக்குள் வெளியிடப்பட வேண்டும் என எதிர்பார்ப்பதாக தேர்வர்கள் தெரிவித்து உள்ளனர். அவ்வாறு வெளியிடப்பட்டால் தேர்வுகள் டிசம்பர் மாதத்தில் நடத்தப்பட வாய்ப்புள்ளது.

மேலும் குரூப் 4 தேர்வுக்கான புதிய பாடத்திட்டத்தை விரைந்து வெளியிட வேண்டும் என ஏற்கனவே கோரிக்கை வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

TNPSC குரூப் IV தேர்வுக்கான காலிப்பணியிடங்கள்:

TNPSC குரூப் IV தேர்வுக்கான மொத்தம் 6491 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முக்கிய குறிப்பு:

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் – யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்…

மேலும் இது போன்ற தகவலை தெரிந்தகொள்ள  தமிழன்ஜாப்ஸ்  இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!