மாவட்ட ரேஷன் கடைகளில் ஆசிரியர்களுக்கு பணி!!

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் ரேஷன் கடைகளில் நடக்க இருக்கும் கொரோனா நிவாரண நிதி வழங்கும் பணிகளில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்களை நியமிக்க அறிவித்துள்ளார்.

கொரோனா நிவாரண நிதி:

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்றின் பரவல் காரணமாக முழு ஊரடங்கு உத்தரவு நேற்று (மே 10) முதல் அமலில் இருந்து வருகிறது. ஊரடங்கினால் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதத்தில் ரூ.4,000 கொரோனா நிதி உதவி வழங்குவதாக தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன் முதல்கட்டமாக ரூ.2,000 இம்மாதத்தில் வழங்க இருக்கிறது.

இதற்காக டோக்கன் வழங்கும் பணி தமிழகம் முழுவதும் நேற்று தொடங்கியது. இந்நிலையில் வரும் மே 15ம் தேதி முதல் பணம் வழங்கப்பட இருக்கிறது. திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் ரேஷன் கடைகள் கொரோனா நிவாரண நிதி வழங்கும் பணிகளில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் ஈடுபட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

இந்த பணிகளில் ஈடுபட இருக்கும் ஆசிரியர்களின் பட்டியலையும் அவர் வெளியிட்டுள்ளார். மேலும், நிவாரண நிதி வழங்கும் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் தன்னார்வலர்களாக முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து, கிருமி நாசினி உடன் வைத்துக் கொண்டு சிறப்பாக இப்பணியை செய்து முடித்திட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.