செல்போனிலேயே சுலபமாக புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம்…!!

புதிய ரேஷன் கார்டு:

புதிய ரேஷன் கார்டு பெற  மொபைல்லில் மூலமாக எவ்வாறு விண்ணப்பிக்கலாம் என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். இந்த எளிய வழிமுறைகளை பின் பற்றி எளிமையாக புதிய ரேஷன் கார்டுகளை பெறலாம்.

மொபைல்லில் விண்ணப்பிக்கும் முறை:

 • முதலில் www.tnpds.gov.in என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
 • அங்கு புதிய குடும்ப அட்டை விண்ணப்பிக்க என்ற பகுதியை தேர்வு செய்ய வேண்டும்.
 • இந்த பகுதியில் உங்களின் அனைத்து விவரங்களையும் முழுவதுமாக பதிவு செய்ய வேண்டும்.
 • விண்ணப்பிக்கும் நபரின் பெயர், தந்தை அல்லது கணவர் பெயர் மற்றும் முகவரி என தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும் முறையாக உள்ளிட்ட வேண்டும்.
 • இப்பொழுது, உங்கள் மாவட்டம், தாலுக்கா, கிராமம் என்று தேவையான விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
 • இப்பொழுது, குடும்ப உறுப்பினர்களை சேர்க்கும் பகுதிக்கு சென்று உங்கள் அனைத்து குடும்ப உறுப்பினர்களையும் பதிவு செய்ய வேண்டும்.
 • பின்னர், குடும்ப அட்டை வகை குடும்ப அட்டை வகையைத் தேர்வு செய்ய வேண்டும்.
 • குடியிறுப்பு சான்று பதிவேற்றம் செய்ய வேண்டும்.
 • அரசு அங்கீகரித்துள்ள ஆவணங்களில் எதாவது ஒன்றை இணைக்க வேண்டும்.
 • எரிவாயு விவரங்களை பதிவு செய்த பின்னர் உங்கள் விண்ணப்பத்தினை சமர்ப்பிக்க வேண்டும்.

தேவையான சான்றிதழ்கள்:

 • ஆதார் அட்டை
 • வாக்காளர் அட்டை
 • எரிவாயு நுகர்வோர் அட்டை
 • வரி ரசீது
 • வாடகை ஒப்பந்தம்
 • குடிசை மாற்று வாரியம் ஒதுக்கீடு விபரம்
 • வீடு ஆவணம்
 • மின்சார ரசீது
 • தொலைபேசி ரசீது
 • வங்கி கணக்கு புத்தகம்
 • பாஸ்போர்ட்
 • ஓட்டுனர் உரிமம்
 • பான் அட்டை
 • வீட்டு வசதி வாரிய ஆவணங்கள்
 • தபால் அடையாள அட்டை

இவற்றில் ஏதாவது ஒன்றை இணைக்க வேண்டும். அடுத்ததாக எரிவாயு இணைப்பு விவரங்களை பூர்த்தி செய்து கொள்ளுங்கள். இறுதியாக விவரங்களைச் சமர்ப்பிக்க, என்பதை கிளிக் செய்யவும்.

விண்ணப்பத்தைப் பதிவு செய்த பின்னர், உங்களது மொபைல் எண்ணுக்கு குறிப்பு எண் அனுப்பப்படும்.

அந்த குறிப்பு எண் வைத்து குடும்ப அட்டை விண்ணப்பநிலை என்ற பகுதிக்கு சென்று சரிபார்த்து கொள்ளுங்கள்

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள  தமிழன்ஜாப்ஸ்   இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!