இனி ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் எடுக்கலாம்!!

தமிழகத்தில் சில மாதங்களுக்கு முன் சில வங்கிகளின் ஏடிஎம் பணம் எடுக்கும் மிஷின் களில் புதிய வசதிகள் கொண்டுவரப்பட்டுள்ளது அதில் ஏடிஎம் கார்டு செலுத்தாமல் பணம் எடுக்கும் வசதி முக்கியமான ஒன்றாகும்.

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் கொண்டுவரப்பட்டுள்ள திட்டமானது அந்த வங்கியில் தரப்படும் யோனோ எஸ்பிஐ மொபைல் ஆப் மூலம் நாம் 500 ரூபாய்க்கு மேல் 2000 ரூபாய்க்கு உள் ஏடிஎம் கார்டு இல்லாமல் எடுத்துக் கொள்ளலாம்.

தற்போது இந்த ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் முறையானது எச்டிஎஃப்சி வங்கியில் சிறப்பாக கொண்டு வரப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

சில வங்கிகளில் இரண்டாயிரத்துக்கும் மேல் பணம் எடுக்கும் வசதி உண்டு ஆனால் எஸ்பிஐ வங்கி களில் 2000 ரூபாய் மட்டும் தான் எடுக்க முடியும் என கணக்கு வைத்துள்ளனர்.