வாக்காளர் அடையாள அட்டையின்றி வாக்களிக்கலாம்! புதிய அறிவிப்பு!

வாக்காளர் அடையாள அட்டையின்றி வாக்களிக்கலாம்! புதிய அறிவிப்பு!

தமிழகத்தில் நாளை வாக்கு பதிவு நடை பெற உள்ளது.  வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்களும் வாக்களிக்கலாம் என குறிப்பிட்ட சில ஆவணங்கள் குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

சட்டமன்ற தேர்தல் ஆணையம் தெரிவித்த தகவல்!

தமிழகத்தில் (ஏப்ரல் 6 ஆம்  தேதி) நாளை வாக்கு பதிவு நடை பெற உள்ளது. இதனை தொடர்ந்து 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என இந்திய அரசியலமைப்பு சட்டம் சொல்கிறது.

வாக்காளர் அடையாள அட்டையின்றி வாக்களிக்க தேவையான ஆவணங்கள்!

வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் வேறு சில அடையாள அட்டைகளை வைத்து வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் அதுகுறித்த 11 ஆவணங்களையும் பட்டியலிட்டுள்ளது.

  • ஆதார் அட்டை
  • தேசிய ஊரக வேலை திட்ட அடையாள அட்டை
  • வங்கி, தபால் அலுவலக கணக்கு புத்தகம்
  • தொழிலார் துறை சுகாதார காப்பீடு திட்டம்
  • ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, தேசிய மக்கள் தொகை பதிவேடு அட்டை
  • பாஸ்போர்ட் புத்தகம்
  • புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்
  • மத்திய, மாநில அரசுகள் அடையாள அட்டை
  • எம்.பி., எம்.எல்.ஏ., அடையாள அட்டை

மேற்கண்ட ஆவணங்களை கொண்டு வாக்காளர்கள் வாக்களிக்கலாம். மேலும் வாக்களிப்பது அவர்களின் ஜனநாயக கடமையாகும். எனவே 18 வயது பூர்த்தி அடைந்த இந்திய குடிமகன்கள் கட்டாயம் சென்று நாளை வாக்களிக்க வேண்டும்.

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!

Leave a comment