தமிழகத்தில் ஓட்டுப்போட இலவச பஸ் வசதி!!

தமிழகத்தில் இலவச பஸ் பயணம்

தமிழகத்தில் நாளை ஏப்.,19 அன்று ஓட்டுப்பதிவு நாளன்று மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் ஓட்டுப்போட இலவச பஸ் பயணம் செய்ய மதுரை கோட்டத்தின் தமிழக அரசு பஸ் போக்குவரத்துக்கழகத்தின் மேலாண் இயக்குநர் ஆறுமுகம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: ஓட்டுப்பதிவு நாளன்று ( ஏப்.,19 ) 60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஓட்டுப்போட ஏதுவாக மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தேனி ஆகிய மண்டலங்களில் அரசு நகரப் பஸ்களில் இலவசப் பஸ் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை காண்பித்து இலவச பஸ் பயணம் மேற்கொள்ளலாம் என அறிவித்துள்ளார்.

Leave a Comment