உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடும் ரம்ஜான் பண்டிகை…

உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடும் ரம்ஜான் பண்டிகை…

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். 30 நாட்கள் நோன்பு முடிந்து, ‘ஈகைத் திருநாள்’ பண்டிகையை முன்னிட்டு இன்று (ஏப்-11) உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் சிறப்பு தொழுகை நடந்தது. இஸ்லாமிய மக்கள் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றனர். ரம்ஜானை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் பா.ஜ., தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ரம்ஜான் பண்டிகை இல்லாதவர்களுக்கும் இயலாதவர்களுக்கும் உதவும் பண்பையும், வித்தியாசமற்ற அன்பையும், சகோதரத்துவத்தையும் உணர்த்தும் நோக்கிலே உலகம் முழுவதும் இந்த ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

தமிழகத்தில் சிறப்பாக கொண்டாடப்படும் ரம்ஜான் பண்டிகை

சென்னை பிராட்வே டான் பாஸ்கோ பள்ளி மைதானம், சென்னை ராயப்பேட்டை, திருப்பூர் நொய்யல் வீதி பள்ளி வளாகம் ,கோவை உக்கடம் கரும்புக்கடை பகுதி, திருப்பத்தூர் ஆம்பூர், சேலம், ஜாகீர் அம்மாபாளையம் ஈத்கா மைதானம், வேலூர், திண்டுக்கல், ராமநாதபுரம் கன்னியாகுமரி, தென்காசி , திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம், அச்சன்புதூர் உள்பட பல்வேறு இடங்களில் ரம்ஜான் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

Leave a Comment