ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு!

இஸுலாம் பண்டிகையில் சிறப்பாக கொண்டாடப்படுவது ரம்ஜான் என்று சொல்லலாம்.

ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு வருகிற 12, 13, 14 ஆகிய நாட்களில் சென்னையிலிருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற மாவட்டங்களுக்கும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிறப்பு பேருந்து

சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று 315 பேருந்துகளும், 12-ந் தேதி அன்று 290 பேருந்துகளும், 13-ம் தேதி அன்று 340 பேருந்துகளும் இயக்கப்பட இருக்கிறது. இதுமட்டுமல்லாமல், சென்னை கோயம்பேட்டில் இருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இன்று மற்றும் 12, 13 அன்று 120 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கூட்ட நெரிசல்

தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் கேட்டு கொள்ளப்படுகிறது.

Leave a Comment