மோடி மீண்டும் பிரதமரானால் இதையெல்லாம் செய்வாராம்! – வைகோவின் பேச்சு!

மோடி மீண்டும் பிரதமரானால் இதையெல்லாம் செய்வாராம்! – வைகோவின் பேச்சு!

தற்போது நம் நாட்டின் பிரதமராக மோடி ஆட்சி செய்து வருகிறார். இந்த நிலையில், இப்போது நாடாளுமன்ற தேர்தல் வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையில் திருச்சி மதிமுக வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து அவரது தந்தையும் மதிமுக பொதுச்செயலாளருமான வைகோ பிரசாரம் மேற்கொண்டார்.

இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் வைகோ அவர்கள் பேசியதாவது, மீண்டும் மோடி பிரதமரானால், அவரின் தொகுதியான வாரணாசியை தலைநகராக மாற்ற போவதாகவும் மற்றும் அரசியலமைப்பை மாற்றுவதாகவும் ஊறியுள்ளார். இதுவரை நம் நாட்டில் எத்தனையோ பிரதமர்கள் ஆட்சி செய்தனர். ஆனால், சமூகத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்திய திராவிட இயக்கத்தை அழித்து, ஒழித்துவிட்டுதான் மறுவேலை பார்ப்பேன் என பிரதமர் மோடி ஊருக்கு ஊர் பேசி வருகிறாராம்.

இந்த பேச்சு முற்றிலும் அவரது ஆணவத்தை காட்டுகிறது. இது பற்றி அவரை நேரில் சந்திக்கும்போது கண்டிப்பாக கேட்பேன் என மதிமுக பொதுச்செயலார் வைகோ அவர்கள் கூறியுள்ளார்.

2வது சுதந்திர போரை போன்றது இந்த தேர்தல். எனவே இதை பற்றி மக்கள் அனைவருக்கும் சிந்தித்து விழிப்புணர்வுடன் இருந்து ஜனநாயகத்தை காக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என வைகோ அவர்கள் பேசினார்.

Leave a Comment