இனி வரும் 5 நாட்களுக்கு வெயிலுக்கு குட் பாய் சொல்லுங்க … ஏப்.15 வரை மழைக்கு வாய்ப்பு!

சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள செய்தி: தென் மாநிலங்களின் மேல், வளி மண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபடும். இதன் காரணமாக, மாநிலத்தின் சில மாவட்டங்களில், மிதமான மழை பெய்ய வாய்ப்பு.

தென் மாவட்டங்கள், டெல்டா மற்றும் அதையொட்டிய மாவட்டங்களிலும், காரைக்காலிலும், ஏப்ரல் 15ம் தேதி வரை மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொருத்தவரை சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சமாக 95 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் குறைந்தபட்சமாக 80 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி வெப்பநிலை இருக்கும் கூடும். மேலும், இன்று முதல் நான்கு நாட்களுக்கு, தமிழகம், புதுச்சேரியில், தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில், வெப்பநிலை குறைந்து மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது…

சென்னையில் வானம் மேக மூட்டமாக காணப்படும். அதிகபட்சம், 35 டிகிரி செல்ஷியஸ் பதிவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது…

Leave a Comment