தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு டேப் வழங்கும் திட்டம்!!

பள்ளிக்கல்வித்துறையின் புதிய திட்டம்:

கல்வித்துறை 2024 – 25 ஆம்  ஆண்டு முதல் அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் மதிப்பீடு பணிகளை செய்வதற்கு அரசு டேப்களை விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழக அரசு பள்ளி கல்வித்துறையில் பல்வேறு விதமான மாற்றங்களையும் செய்து வருகிறது.இவை ஆசிரியர்களின் பணி சுமையை குறைக்கும் வகையிலும், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு கல்வித்தரத்தை உயர்த்தும் வகையிலும் .தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறையின் கீழ் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு வரும் கல்வியாண்டில் மதிப்பீட்டு பணிகளை மேற்கொள்வதற்காக டேப்களை வழங்க அரசு தீர்மானித்துள்ளது. செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்காக 38 மாவட்டங்களிலும் உள்ள ஆசிரியர்களுக்கு தேர்தலுக்குப் பிறகு மாநில பள்ளிக்கல்வித்துறை டேப்களை வழங்க அறிவிப்பு.

தமிழக அரசு டேப்க்காக 101 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இத்திட்டத்தின் மூலமாக முக்கிய கோப்புகளை பராமரிப்பது மற்றும் பாதுகாப்பது சுலபமாக இருக்கும் என்று கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாநிலம் முழுவதும் மொத்தம் 79 ஆயிரத்து 723 டேப்லெட்கள் விநியோகிக்க திட்டமிட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார். கோடை விடுமுறை சமயத்தில் டேப்லெட்டை பயன்படுத்துவது மற்றும் அதன் சிறப்பு அம்சங்களை ஆராய்வது தொடர்பாக ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படும் என்றும், தொகுதி கல்வி அலுவலர்கள் ஆசிரியர்களுக்கு உதவி செய்வார்கள் என்றும் அறிவித்துள்ளார்.

Leave a Comment